ஐபிஎல் 2024: கேகேஆர் அணிக்கு எதிராக புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் லக்னோ!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது புதிய ஜெர்ஸி அணிந்து விளையாடவுள்ளது.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏனெனில் நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன. இந்த இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
இந்நிலையில் இப்போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியாவது பிரத்யேக ஜெர்ஸி அணிந்து விளையாடவுள்ளது. அதன்படி கொல்கத்தாவின் பழம்பெரும் கால்பந்தாட்ட கிளப்களில் ஒன்றான டான் மோகன் பாகன் கிளப்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது பச்சை மற்றும் மெருன் நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளது.
New colours for a big game!
— Lucknow Super Giants (@LucknowIPL) April 13, 2024
কাল দেখা হবে pic.twitter.com/gi8NP9dW3n
இதற்கான அறிவிப்பையும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளபதிவியில் வெளியிட்டுள்ளது. மேலும் அவர்களது பதிவில் லக்னோ அணி வீரர்கள் புதிய ஜெர்ஸியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், ரசிகர்களின் வாழ்த்துகளையும் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now