
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் கணுக்கால் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.
முன்னதாக அவர் இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும், அதன் பின் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியாக இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட இருந்தார். அதன் பின் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருப்பார் என கருதப்பட்ட நிலையில், அவர் தற்போது டெஸ்ட் தொடரை தவிர்த்து டி20 தொடர் மற்றும் பயிற்சிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக டி20 அணியில் பியூரன் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை தென் ஆப்பிரிக்கா அணிக்காக 19 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால், 2021 ஜூலைக்கு பின் அவர் தென் ஆப்பிரிக்க டி20 அணியில் இடம் பெறவில்லை. லுங்கி இங்கிடி இல்லாத நிலையில், தென் ஆப்பிரிக்க டி20 அணியில் மூன்று முதன்மை வேகப் பந்துவீச்சாளர்களும் இல்லாதா நிலை ஏற்பட்டுள்ளது.