
ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் அடங்கிய இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த டிராவிட், என்னுடன் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிப்பனே தவிர, எவருக்கும் வாய்ப்பளிக்காமல் மீண்டும் அழைத்து வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியராகுல் டிராவிட் “நான் வீரர்களிடையே நேரடியாகவே சொல்லிவிடுவேன். கிரிக்கெட் சுற்றுப் பயணத்துக்கு என்னுடன் வந்தால் விளையாட வாய்ப்பு அளிக்காமல் திரும்ப அழைத்து வரமாட்டேன். ஒரு சுற்றுப் பயணத்துக்கு சென்றுவிட்டு விளையாடமல் திரும்பி வருவது எத்தகைய கொடுமையான விஷயம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நானும் அதுபோல இருந்திருக்கிறேன். உள்நாட்டில் 700-800 ரன்களை குவித்துவிட்டு வெளிநாட்டில் விளையாடாமல் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் ஒருவரின் திறமை எப்படி தெரியும்?.