மஹ்மதுல்லாவின் ஆலோசனை எங்கள் வெற்றிக்கு உதவியது - அஃபிஃப் ஹொசைன்!
கேப்டன் மஹ்மதுல்லா வழங்கிய ஆலோசனையே ஆஸ்திரேலியாவை வீழ்த்த எங்களுக்கு உதவியது என வங்கதேச அணி வீரர் அஃபிஃப் ஹொசைன் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தாக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 121 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணி அஃபிஃப் ஹொசைனின் அதிரடியான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய அஃபிஃப் ஹொசைன்,“நான் பேட்டிங் செய்ய வெளியே வந்த போது கேப்டம் மஹ்மதுல்லா என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னார். அவர் கூறியது போலவே நிதனமாக விளையாடி அணியின் ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தினேன்.
அதன்பின் நூருல் ஹசனுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததன் மூலம், எங்களால் இலக்கை நோக்கி முன்னேற முடிந்தது. அதற்கேற்றவாரே இப்போட்டியில் நாங்கள் வெற்றியையும் பெற்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now