
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஐபிஎல்-ஐப் போன்று டி20 கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் மூலம் நடத்தப்படும் இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஐபிஎல்-ஐ சேர்ந்த சென்னை,மும்பை,டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளின் உரிமையாளைர்களும் அணிகளை வாங்கி உள்ளனர். சென்னை அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியையும்,மும்பை அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும்,கொல்கத்தா அணி நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கி உள்ளது.
ஐபிஎல்-ஐப் போன்றே அணிகளுக்கு பெயர்களையும் வைத்து உள்ளனர். டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (சென்னை),எம்ஐ நியூயார்க் (மும்பை),லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ் (கொல்கத்தா) என்றே தங்கள் அணிகளின் பெயர்களை ஒட்டியே வைத்து உள்ளன.மேலும் கேப்டன்களும் அணியுடன் நெருக்கமான வீரர்களையே நியமித்து உள்ளனர்.