
Manchester United owners, Adani Group among 22 entities bidding for new IPL teams (Image Source: Google)
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்று உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகபெரும் தொடராக பார்க்கப்பட்டு வருகிறது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.வர்த்தக ரீதியிலும் இந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் இடம் பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும்.
ஐபிஎல் புதிய அணிகளுக்கான ஏலம் டெண்டர் நடைமுறையை பிசிசிஐ கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிட்டது. டெண்டருக்கான விண்ணப்பம் ரூ.10 லட்சம் ஆகும். இந்த தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.