INDW vs SAW: சதமடித்த சாதனைகளை குவித்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் இருதரப்பு தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்தவகையில் தற்போது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான தொடர்களிலும் பங்கேற்றுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானாது இன்று பெங்களூருவில் தொடங்கியது.
இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தயாளான் ஹேமலதா 12 ரன்களுக்கும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 17 ரன்களுக்கும், ரிச்சா கோஷ் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 99 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Trending
பின்னர் களமிறங்கிய தீப்தி சர்மா ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 6ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்பின் 37 ரன்கள் எடுத்த நிலையில் தீப்தி சர்மா விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி சதம் கடந்திருந்த ஸ்மிருதி மந்த 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 117 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பூஜா வஸ்திரேகர் 37 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழாகாமல் இருந்தார்.
இதன்மூலம் இந்திய மகளிர் அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அயபோங்கா காகா 3 விக்கெட்டுகளையும், மசபடா கிளாஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
Smriti Mandhana is the first woman to score an international century at the Chinnaswamy Stadium!#INDvSA #INDWvSAW #Cricket #SmritiMandhana pic.twitter.com/TANAZjtrhA
— CRICKETNMORE (@cricketnmore) June 16, 2024
அதன்படி இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 117 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், சச்ர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம், பெங்களூரு எம் சின்னசாமி மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்து அசத்திய முதல் வீராங்கனை எனும் சாதனையையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now