
Mandhana named in ICC Women's T20I Team of 2021 (Image Source: Google)
2021ஆம் ஆண்டிற்கான ஐசிசி பெண்கள் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார்.
அவர் 2021ஆம் ஆண்டில் 9 போட்டிகளில் 255 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் டாப்-5 பட்டியலில் இடம் பிடித்தார்.
அதேபோல் இந்த பெண்கள் அணிக்கு இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் வேறு எந்த இந்திய வீராங்கனைகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.