
தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதால் டெஸ்ட் போட்டி டர்பனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமும் அத்துடன் கைவிடப்படுவதாக அறிவித்தது.
இதனையடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தில் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி கேப்டன் டெம்பா பவுமா 70 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழ்ந்தனார். இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய் அசிதா ஃபெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா ஃபெர்னண்டோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொட்ங்கிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததுட்ன், 13.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு வெறும் 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் கமிந்து மெண்டீஸ் 13, லஹிரு குமரா 10 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜான்சன் 7 விக்கெட்டை கைப்பற்றினார்.