
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் அந்த அணி விளையாடிய ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியைப் பதிவுசெய்ததுடன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக லாரா வோல்வார்ட் தொடர்கிறார்.
மேற்கொண்டுமுத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெறாமல் இருந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் மரிஸான் கேப் இத்தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு துமி செகுகுனே மற்றும் அயந்தா ஹுலூபி ஆகியோரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். அதேசமயம் அறிமுக வீராங்கனை மியானே ஸ்மித் தென் ஆப்பிரிக்க டி20 அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.