Advertisement

மும்பை இந்தியன்ஸின் தலைமைப் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்!

தென்ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Mark Boucher is the new head coach of Mumbai Indians!
Mark Boucher is the new head coach of Mumbai Indians! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 16, 2022 • 11:42 AM

தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முதலாவது டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 6 அணிகளையும் இந்திய நிறுவனங்களே சொந்தமாக்கியுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 16, 2022 • 11:42 AM

இதில் எம்.ஐ. கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்சை நிர்வகிக்கும் ரிலையன்ஸ் வாங்கியுள்ளது. இந்த நிலையில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச்சும், பேட்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹசிம் அம்லாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Trending

மேலும் அணியின் பொதுமேலாளராக தென் ஆப்பிரிக்காவின் ராபின் பீட்டர்சனும், பீல்டிங் பயிற்சியாளராக நியூசிலாந்தின் ஜேம்ஸ் பாமென்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மஹேலா ஜெயவர்த்தனே ஒட்டுமொத்த அணிகளின் உயர்செயல்பாட்டு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் மும்பை இந்தியன்சுக்கு பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளது. 

அந்த பதவிக்கு தென்ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரின் பெயர் அடிபட்டுவந்த நிலையில், அவரையே அணியின் தலைமைப் பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement