
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 15 ஓவரில் 152 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை 13.5 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தொடக்கத்தில் 6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினர். 3ஆவது வீரராக களம் இறங்கிய திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்கள் விளாசினார். இவர் ஆட்மிழக்கும்போது 5.5 ஓவரில் இந்திய அணி 55 ரன்கள் சேர்த்திருந்தது.
வேகப்பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஆனால் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களான ஷம்சி, மார்க்கிராம் பந்து வீச்சில் சற்று திணறினர். ஷம்சி 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மார்க்கிராம் 3 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினர்.