
Marnus Labuchagne Excluded From Aussie Squad For For First ODI Against Zimbabwe (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி இப்போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது.
அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் பிளேயிங் லெவனில் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுசாக்னேவுக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக அலெக்ஸ் கேரி 4ஆம் இடத்தில் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.