
Marnus Labuschagne's 93 In T20 Blast Sends A Message To IPL Franchises (Image Source: Google)
இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான டி20 பிளாஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிளாமோர்கன் அணி, குளோசெஸ்டர்ஷைர் அணியை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற குளோசெஸ்டர்ஷைர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி கிளென் பிலிப், ஹாவெல்லின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 179 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கிளாமோர்கன் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் லயேட், நிக்கோலஸ் செல்மேன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.