Advertisement

AUS vs WI: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; வார்னர், ஹசில்வுட் ஆகியோருக்கு இடம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
AUS vs WI: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; வார்னர், ஹசில்வுட் ஆகியோருக்கு இடம்!
AUS vs WI: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; வார்னர், ஹசில்வுட் ஆகியோருக்கு இடம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 24, 2024 • 11:56 AM

ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜன. 25) பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 24, 2024 • 11:56 AM

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதலும், டி20 தொடர் பிப்ரவரி 09ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending

மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில், சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர் இடம்பிடித்துள்ளார். மேலும், சமீபகாலமாக டி20 அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஜோஷ் ஹசில்வுட்டிற்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களைத் தவிர்த்து கிளென் மேஸ்க்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மேத்யூ வேட், டிம் டேவிட், டிராவிஸ் ஹெட் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. 

அதேசமயம் ஆஸ்திரேலிய டெஸ் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கே), சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டார்ஃப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement