குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ், சர்ஃப்ராஸ் அஹ்மத் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ்
- இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
- நேரம் - இரவு 7 மணி
போட்டி முன்னோட்டம்
சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் சர்ஃப்ராஸ் அஹ்மத், இஃப்திகார் அஹ்மத் ஆகியோரும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
அவர்களுடன் ஜேசன் ராய், முகமது ஹபீஸ், ஓடியன் ஸ்மித், உமர் அக்மல் போன்றோரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுள்ளனர். பந்துவீச்சில் நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், உமைத் ஆசிஃப் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஃபகர் ஸமான், ஷாய் ஹோப், டேவிட் வைஸ், சிக்கந்தர் ரஸா ஆகியோர் இருப்பது அணியின் பேட்டிங் பலத்தை கூட்டியுள்ளது.
பந்துவீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப், ரஷித் கான் என நட்சத்திர வீரர்களைக் கொண்டுள்ளனர். இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 14
- குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - 07
- லாகூர் கலந்தர்ஸ் - 07
உத்தேச லெவன்
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஜேசன் ராய், மார்ட்டின் கப்தில், சர்ஃபராஸ் அகமது (கே), முகமது நவாஸ், இஃப்திகார் அகமது, ஒடியன் ஸ்மித், அப்துல் பங்கல்சாய், முகமது ஹபீஸ், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், கைஸ் அகமது
லாகூர் கலந்தர்ஸ் - ஃபகார் ஸமான், மிர்சா தாஹிர் பெய்க், ஷாய் ஹோப், கம்ரான் குலாம், சிக்கந்தர் ராசா, ஹுசைன் தலாத், டேவிட் வைஸ், லியாம் டாசன், ஹாரிஸ் ராவுஃப், ஷஹீன் அஃப்ரிடி (கே), ஸமான் கான்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - ஷாய் ஹோப்
- பேட்டர்ஸ் - மார்ட்டின் கப்தில், இஃப்திகார் அகமது, மிர்சா தாஹிர் பெய்க், ஃபகார் ஸமான்
- ஆல்-ரவுண்டர்கள் - முகமது நவாஸ், ஒடியன் ஸ்மித்
- பந்துவீச்சாளர்கள் - ஹாரிஸ் ரவூப், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.
கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - ஃபகார் ஸமான், மார்ட்டின் கப்தில், ஷஹீன் அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன்
Win Big, Make Your Cricket Tales Now