
ஐபிஎல் 16ஆவது சீசனில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆரம்பமே சிஎஸ்கேக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் 2வது பேட்டிங் செய்யும் அணிக்கே ரன்களை எளிதாக சேஸிங் செய்ய முடியும். இதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி முதலல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளரான தீபக் சாஹர் முதல் ஓவர் வீசும் போதே காலில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டதாக மருத்துவ உதவியை நாடினார். இதனையடுத்து முதலுதவி சிகிச்சை பெற்று கொணட தீபக் சாஹர், அந்த ஓவரை தட்டு தடுமாறியே வீசினார்.
அதன் பிறகு முதல் ஓவரை முடித்துவிட்டு, அவர் பெவிலியனுக்கு சென்றார். இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு ஏறபடுத்தியுள்ளது. 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி, தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆனால், அந்த சீசனில் காயமடைந்ததால் ஒரு போட்டியில் கூட தீபக் சாஹர் விளையாடவில்லை. எனினும் அவர் மீது நம்பிக்கை வைத்து இம்முறையும் தோனி தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார். ஆனால் இம்முறையும் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.