Advertisement

ரோஹித் இல்லாதது மிகப்பெரும் இழப்பு - கவுதம் காம்பீர்!

தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரிய இழப்புஎன்று காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
"Massive Blow": Gautam Gambhir On Rohit Sharma's Absence In South Africa Test Series (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 14, 2021 • 05:22 PM

உலகின் தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோஹித் சர்மா. தொடக்க வீரரான அவர் இந்திய அணியின் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்துக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு டெஸ்ட் போட்டிக்கு துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 14, 2021 • 05:22 PM

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகி உள்ளார். மும்பையில் நேற்று முன்தினம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு இடது தொடையில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து குணமடைய அவருக்கு 4 வார காலம் ஆகலாம். இதனால் துணைக் கேப்டனான அவர் தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை.

Trending

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அறிமுக வீரர் பிரியங்க் பன்சால் டெஸ்ட் அணிக்கு தேர்வாகி உள்ளார். குஜராத்தை சேர்ந்த  அவர் இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் ஆவார்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விளையாடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்க தொடரில் காயத்தால் விலகி உள்ளார். அவர் ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஏனென்றால் அவர் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். 

ரோஹித் சர்மா டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் ஆட முடியாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றமே. ரோகித் சர்மா விலகியதால் இளம் வீரருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வாலும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கலாம். இதனால் புதுமுக வீரரான பிரியங்க்  பன்சால்க்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement