
Matheesha Pathirana Ruled Out Of Sri Lanka vs Australia 3rd T20I (Image Source: Google)
இலங்கையை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலர் மதீஷா பதிரனா. அண்மையில் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பையில் இலங்கை அணியில் இடம்பிடித்து அருமையாக பந்துவீசி 4 போட்டிகளில் 7 விக்கெட் வீழ்த்திய அண்டர் 19 ஃபாஸ்ட் பவுலர் மதீஷா பதிரனா.
இலங்கை இளம் ஃபாஸ்ட் பவுலரான 19 மதீஷா பதிரனா, இலங்கை லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் மலிங்காவை போன்ற பவுலிங் ஆக்ஷனை கொண்டவர். இலங்கை அணிக்காக பல அருமையான ஸ்பெல்களை வீசி மேட்ச் வின்னராக ஜொலித்தவர் மலிங்கா. அவரைப் போன்றே பந்துவீச்சு ஆக்ஷனை கொண்டதால் இவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான முதல் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி தனது எண்ட்ரீயைக் கொடுத்தார். அதன்பின் அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.