
Mathews, Karunaratne Left Out As Sri Lanka Cricketers Sign New Contracts (Image Source: Google)
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்காக இந்திய அணி வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இத்தொடரில் பங்கேற்கும் 30 வீரர்களும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகியோர் கையெழுத்திட மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் இந்திய அணிக்கெதிரான தொடரில் விளையாடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.