
உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்களை வரும் 5 ஆம் தேதிக்குள்ளாக தேர்வு செய்தாக வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருக்கிறது. உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் என்பதால் இந்தியா கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
வரும் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசிய கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 17 பேர் கொண்ட இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதிலிருந்து தான் உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்னாள் வீரர்களும் அணியை தேர்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ ஹைடன் இந்திய அணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து அணியை பட்டியலிட்டுள்ளார். அதன்படி அவரது அணியில், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் முதல் மூன்று இடங்களில் களமிறங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.