ENG vs WI, 2nd ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ரும் முனைப்பிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டியின் போது விரலில் ஏற்பட்ட எழும்பு முறிவு காரணமாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து அவருக்கு பதில் மேத்யூ பாட்ஸ் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் பிளேயிங் லெவனில் தங்களின் வாய்ப்புகளை தக்கவைத்துள்ளனர். இதில் முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தெல் உள்ளிடோர் இப்போட்டியிலும் ரன்களைக் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் பந்துவீச்சில் பிரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத் மற்றும் ஆதில் ரஷித் ஆகியோர் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷீத், சாகிப் மஹ்மூத்
Also Read: LIVE Cricket Score
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோதி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.
Win Big, Make Your Cricket Tales Now