
Maxwell ties knot with Vini Raman in Indian wedding in Chennai; video goes viral (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமன் என்பவரை கடந்த பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தார். அவர்களது இந்த பயணம் தற்போது திருமணம் செய்து தம்பதிகளாக மாறும் அளவிற்கு இனிமையாக மாறியுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக்களிலும் அசத்தி வருகிறார்.
மிகச்சிறந்த அதிரடி ஆட்டக்காரரான அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக பெங்களூரு அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த 15 வது ஐபிஎல் சீசனின் கேப்டனாக செயல்படுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தனது திருமணம் காரணமாக அவர் இந்த தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை தவற விடுகிறார்.