
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்திலும் உள்ளது.
இதனால் எதிர்வரும் போட்டிகளில் முடிவில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலின் டாப் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் ரிஷப் பந்த தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரை எதிர்கொண்டுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சிறப்பாக செயல்பட்டதுடன் விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் உள்ளது.
அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் அந்த அணி இறுதிவரை போராடிய நிலையிலும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து அந்த அணி அடுத்ததாக ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது. இதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தீவிரமாக தயாராகியும் வருகின்றது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக லக்னோ அணிக்கு மிகப்பெரும் நற்செய்தி கிடைத்துள்ளது.