
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநராக ராப் கீ முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட்டை இன்னும் மேம்படச் செய்வதில் அவர் காட்டும் அக்கறையின் பலனாக டெஸ்ட் போட்டிகளுக்கு கேரி கிரிஸ்டனையும், ஒருநாள் மற்றும் டி20களுக்கு நியூசிலாந்து அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம்மையும் பயிற்சியாளராக நியமிக்க பரிசீலித்து வருகிறார்.
இது தொடர்பாக இங்கிலாந்தின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் கேப்டன் இயான் மோர்கனை, ராப் கீ கலந்தாலோசிக்க அவரோ ஐபிஎல் அனுபவத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளராக இருக்கும் பிரெண்டன் மெக்கல்லமை அணுகுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரில் கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற இயன் மோர்கன் மற்றும் கோச் மெக்கல்லமின் பங்கு அபரிமிதமானது. அதே வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கும் கேரி கர்ஸ்டன் இங்கிலாந்து பணி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.