லபுஷாக்னே சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மார்னஸ் லபுஷாக்னே சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக ஒரு நல்ல வீரர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் நடைபெற்று முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நாளை (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில் இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கவுள்ளது.
Trending
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக கலேவில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்டில் மார்னஸ் லாபுஷாக்னே சிறப்பாக விளையாடுவார் என்றும், அவர் கடந்த காலங்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் திறனை கொண்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மெக்டொனால்ட், “இப்போட்டிக்கான எங்கள் அணியில் மாற்றங்கள் ஏதும் இல்லை. குறிப்பாக முதல் ஆறு பேர் அப்படியே இருப்பார்கள், நீங்கள் அதை முதல் ஏழு பேருக்கு நீட்டிக்கலாம், அவர்கள் ஒரு யூனிட்டாக நன்றாக செயல்பட்டார்கள் என்று நினைக்கிறேன். எங்கள் பயிற்சி அமர்வில் தேவைப்படும் வெவ்வேறு பணிச்சுமைகளின் அடிப்படையில் நிகழ்வுகளின் வரிசையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது, எனவே அதைப் பற்றி இங்கு எங்களால் எதுவும் கூற முடியாது.
மார்னஸ் லபுஷாக்னே சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக ஒரு நல்ல வீரர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், அவர் இதற்கு முன்பு இங்கு வந்துள்ளார், இந்த மைதானத்திலும் அவர் ஒரு சதம் அடித்துள்ளார். முதல் ஆட்டத்தில் எங்கள் அணி செயல்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, நாங்கள் ஏன் மீண்டும் அதை செய்ய முடியாது என்று தோன்றுகிறது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம், மேலும் அதைப் பற்றி பலமுறை நாங்கள் பதிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
Win Big, Make Your Cricket Tales Now