
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி மகளிர் அணியானது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அலியா ரியாஸ் 26 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டும், அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வெர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.