-mdl.jpg)
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக் தொடர் 12 சீசன்களைக் கடந்து 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - ஜோர்டன் காக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோர்டன் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த டி காக் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷான் மார்ஷ் 4 ரன்களுக்கும், ஜேக் ஃப்ரெசர், ஹார்வி18 ரன்களிலும், வெல்ஸ் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவிற, 14 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை மட்டுமே எடுத்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் டேனியல் லாரன்ஸ் 2 விக்கெட்டுகளையும், இமாத் வாசிம், கிளென் மேக்ஸ்வெல், ஜோயல் பாரிஸ் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.