
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
அதன்படி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் ஜூன் 18இல் தொடங்கி ஜூலை 9ஆஆம் தேதி நிறைவடைகின்றன. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ‘ஏ’, ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் இதர அணிகளுடன் மோதும்.
இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து 15 பேர் அடங்கிய அணியை இன்று அறிவித்துள்ளது. ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான அணியில் மேக்ஸ் ஓடவுட், விக்ரம்ஜிட் சிங், பாஸ் டி லீட், லோகன் வேன் பீக் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் காலின் அக்கர்மேன், ஃப்ரெட் கிளாசென், வாண்டெர் மோர்வ், பால் வான் மீகெரன், பிராண்டன் குளோவர் போன்ற பிரபல வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.