வேகத்தை மட்டுமே மாற்றி பந்துவீசினேன் - குல்தீப் யாதவ்!
இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன் விளையாடுவது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் மற்றும் அப்துல்லா ஆகியோர் களம் இறங்கினர். இதில் 20 ரன் எடுத்த நிலையில் அப்துல்லா அவுட் ஆனார்.
இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் இமாமுடன் ஜோடி சேர்ந்தார். இதில் இமாம் 36 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரிஸ்வான் பாபர் ஆசமுடன் இணைந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் ஆசம் அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் அவுட் ஆனார்.
Trending
அதன்பின் களம் இறங்கிய சகீல் 6 ரன், இப்டிகார் அகமது 4 ரன், ஷதாப் கான் 2 ரன், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரிஸ்வான் 49 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்த தொடர் விக்கெட் வீழ்ச்சி காரணமாக பாகிஸ்தான் அணி தடுமாறியது. இதையடுத்து நவாஸ் மற்றும் ஹசன் அலி ஜோடி சேர்ந்தனர்.
இதில் நவாஸ் 4 ரன்னிலும், ஹசன் அலி 12 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனால் 187 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், குல்தீப், பாண்ட்யா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய குல்தீப் யாதவ், “நான் இந்த உலகக் கோப்பை தொடரை ரசித்து வருகிறேன். இந்த ஆடுகளத்தில் எங்கு பந்து வீசுவது என்று எனக்கு நன்றாக தெரியும். உண்மையை சொல்வது என்றால் இந்த ஆடுகளம் பந்து வீசுவதற்கு கடினமானது. மேலும் மெதுவாகவும் இருந்தது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன் அடிப்பதற்கு பெரிய முயற்சிகள் எதையும் செய்யவில்லை. இதனால் நான் அடிப்பதற்கு இடம் தராமல், வேகத்தை மட்டும் மாற்றி மாற்றி வீசிக்கொண்டு இருந்தேன்.
ரிஸ்வான் என்னை ஸ்வீப் அடிக்க முயற்சி செய்யவில்லை. அவர் எப்படியும் ஒரு மோசமான ஷாட் விளையாடுவார் என்று நான் நம்பினேன். அதேபோல் ஷகில் நிறைய ஸ்வீப் மற்றும் பெடல் ஷாட்கள் விளையாடுவதை நாம் பார்த்து வருகிறேன். எனவே நான் அவருக்கு பந்தை விக்கெட் டூ விக்கெட் வைக்க விரும்பினேன். அதிர்ஷ்டவசமாக நான் அவருடைய விக்கெட்டை கைப்பற்றினேன். இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன் விளையாடுவது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும் மிக உற்சாகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now