
ஐசிசியின் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்த ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்ததன் மூலம் கடுமையான விமர்சங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சயம் வென்றாக வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியா இத்தொடரை விளையாடவுள்ளது.
இந்நிலையில் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் காயம் காரணமாக பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல் இருப்பது அணிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மற்று தொடக்க வீரராக களமிறங்கி வரும் மிட்செல் மார்ஷின் செயல்பாடுகள் இத்தொடரில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.