
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் எதிர்பார்க்காத வீரர்கள்தான் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் மற்றும் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இருவரும் மிகவும் முக்கியமானவர்கள்.
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இவர்கள் இருவரும் ஆறு போட்டிகளில் நானூறு ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார்கள். ஆனால் முன்னாள் வீரர்கள் உலக கோப்பைக்கு முன்பாக கணித்ததில் ஷுப்மன் கில், பாபர் ஆசாம் போன்றவர்கள்தான் அதிக ரன் குவிப்பவர்களில் முன்னணியில் இருந்தார்கள்.
மேலும் டேவிட் வார்னர் ஓய்வு குறித்து அவர் செல்லும் இடமெல்லாம் கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் டேவிட் வார்னரை இந்த ஓய்வு குறித்த கேள்விகள் மிகவும் எரிச்சல் அடைய வைத்தது. இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது இப்படியான ஓய்வு குறித்த கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாக பதில் அளித்து இருந்தார்.