
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் - மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூயார்க் அணியில் தொடக்க வீரர்கள் ஜஹாங்கீர் 25, மொனான்க் படேல் 5, நிக்கோலஸ் பூரன் 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த டெவால்ட் ப்ரீவிஸ் - டிம் டேவிட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டிம் டேவிட் 23 ரனகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டெவால்ட் ப்ரீவிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களை எடுத்திருந்த ப்ரீவிஸும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூயார்க் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைச் சேர்த்தது.