
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசாத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியானது 14 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஐபிஎல் விதிகளை மீறியதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஆஷீஷ் நெஹ்ரா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் கராணமாக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.