Advertisement

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!

மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 07, 2024 • 12:59 PM
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நாளை மறுநாள் நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது.

Trending


நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று வெற்றி பாதைக்கு திரும்பும் வகையிலு, அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால் அதிலிருந்து மீண்டு வெற்றிபெறும் வேட்கையுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் உத்தேச லெவன் குறித்து இப்பதில் பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த ஐபிஎல் சீசனை எதிர்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இத்தொடரில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் ஆகியோருடன் காயத்திலிருந்து மீண்டுள்ள சூர்யகுமார் யாதவும் இடம்பிடிப்பார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபக்கம் அணியின் பந்துவீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணைக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகின்றனர். அவர்களுடன் குவேனா மபகா, ஜெரால்ட் கோட்ஸி மற்றும் பியூஷ் சாவ்லா போன்ற வீரர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணி இப்போட்டியில் வெல்வதுடன், நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: இஷான் கிஷான், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கே), டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால், குவேனா மபகா

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலின் ஒன்பதாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அணியின் பேட்டிங் ஆர்டரை எடுத்துக்கொண்டால், டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் இருக்கும் பட்சத்திலும், இதில் பெரும்பாலான வீரர்கள் தொடர்ச்சியாக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவருது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சில் கலீல் அஹ்மத், இஷாந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்துவீசினாலும், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, மிட்செல் மார்ஷ், அக்ஸர் படேல் உள்ளிட்ட வீரர்கள் ரன்களை வாரி வழங்கி வருவது அணிக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. மேலும், காயம் காரணமாக மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் ஆகியோர் இப்போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்பதால் இது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க், ரிஷப் பந்த் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்ஸர் படேல், ரசிக் சலாம், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement