Advertisement

மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 21, 2025 • 12:12 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 63ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது

Bharathi Kannan
By Bharathi Kannan
May 21, 2025 • 12:12 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீது ரசிகர்களின் ஒத்துமொத்த கவனமும் திரும்பியுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில், தற்போது அடுத்தடுத்து வெற்றிகளைப் பூர்த்தி செய்து தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பிலும் நீடித்து வருகிறது. இதனால் எஞ்சிய போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால அந்த அணி கூடுதல் உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. 

அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரியான் ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ், ஹர்திக் பண்டியா, தீலக் வர்மா, நமன் தீர் என நட்சத்திர பட்டாளங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். மறுபக்கம் பந்துவீச்சிலும் டிரென்ட் போல்ட், தீபக் சஹார், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோரும் அபாரமான ஃபார்மில் உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெற்று, தங்களின் ஆதிக்கத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 13 புள்ளிகளுடன்  புள்ளிப்பட்டியலின் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் அந்த அணி வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும் என்பதால் அந்த அணி கூடுதல் முயற்சியுடன் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தமட்டில் அபிஷேக் போரல், அக்ஸர் படேல், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம், நடராஜன் ஆகியோரை மட்டுமே அந்த அணி நம்பி இருக்கிறது. இதனால் இப்போட்டியில் அந்த அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: கேஎல் ராகுல், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, விபராஜ் நிகாம், தங்கராசு நடராஜன், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷ்மந்த சமீரா.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் – 36
  • மும்பை இந்தியன்ஸ் – 20
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 16

Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ரியான் ரிக்கல்டன், அபிஷேக் போரெல்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - வில் ஜாக்ஸ், ஹார்டிக் பாண்டியா, அக்சர் படேல்
  • பந்து வீச்சாளர்கள்- டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்/அஸ்வினி குமார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement