
Mumbai Indians vs Lucknow Super Giants Dream11 Prediction, IPL 2024: இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துவது மிகவும் கடினம். இருப்பினும் இவ்விரு அணிகளும் தங்ளது கடைசி போட்டியில் வெற்றியுடன் முடிக்க ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
MI vs LSG: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
- இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மைதானம்
MI vs LSG: Pitch Report
இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 172 ரன்களாக உள்ளது. மேலும் இங்கு இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் இருக்கும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
MI vs LSG: Head-to-Head
- மோதிய போட்டிகள் - 05
- மும்பை இந்தியன்ஸ் - 01
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 04
MI vs LSG: Live Streaming Details
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம்.
Mumbai Indians vs Lucknow Super Giants Predicted XIs
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், நமன் திர், நேஹல் வதேரா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கே), டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.