Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!

மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்,

Bharathi Kannan
By Bharathi Kannan May 17, 2024 • 13:04 PM
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துவது மிகவும் கடினம். இருப்பினும் இவ்விரு அணிகளும் தங்ளது கடைசி போட்டியில் வெற்றியுடன் முடிக்க ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Trending


மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 9 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை முதல் அணியாக இழந்துவிட்ட மும்பை இந்தியன்ஸ் இன்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தக்கூடும்.

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, நெஹால் வதேரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஒருசேர ரன்களைச் சேர்க்காததே அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், நுவான் துஷாரா ஆகியோரும் இருப்பது அணிக்கு சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், நமன் திர், நேஹல் வதேரா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கே), டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் கூட பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு கேள்விக்குறிதான். ஏனெனில் அந்த அணி கடைசியாக விளையாடிய போட்டிகளில் மிகப்பெரும் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதே இதற்கு காரணம.

அணியின் பேட்டிங்கில் கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரன், குயின்டன் டி காக், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டொய்னிஸ் போன்ற வீரர்கள் இருந்த போதும் அந்த அணியால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெறமுடியாமல் தவித்து வருகிறது. இதனால் அந்த அணி பேட்டிங்கில் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சாளச்ர்களில் ஆயூஷ் பதோனி, அர்ஷத் கான், மொஹ்சின் கான், நவீன் உல் ஹக் போன்ற வீரர்கள் இருப்பது கூடுதல் பலம் தான்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கே), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், குர்னால் பாண்டியா, யுத்வீர் சிங் சரக், அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement