Advertisement

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 31, 2024 • 16:41 PM
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலபரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. இதனால் முதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் மும்பை அணியும், ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதுள்ள எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை 
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சீசனை எதிர்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதிலும் கடந்த போட்டியில் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதுடன், ஐபிஎல் தொடரில் மிகப்பெரும் வரலாற்று சாதனையை ஹைதராபாத் அணி படைக்கவும் முக்கிய காரணமாக அமைந்தனர். 

பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா ஆகியோரும், பந்துவீச்சில் ஜஸ்ப்ரித் பும்ராவைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறிவருகின்றன. இதனால் நாளைய போட்டிக்கான மும்பை அணியில் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. மேலும் ஹர்திக் பாண்டியா மீதுள்ள விமர்சனங்களை போக்க இப்போட்டியை பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் சஞ்சு சாம்சன் தலைமையில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசனில் தனது ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜுரெல் , ஷிம்ரான் ஹெட்மையர் போன்ற வீரர்கள் இருப்பது அணியின் வலிமையாக பார்க்கப்படுகிறது. 

ஆனால் இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் இன்னும் தங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தடுமாறி வருவது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் டிரெண்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், நந்த்ரே பர்கர் போன்ற வீரர்கள் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்

இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. வான்கடேவில் இந்த சீசனின் முதல் போட்டி இதுவாகும். இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 172 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 28
  • மும்பை இந்தியன்ஸ் - 15
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 12
  • முடிவில்லை - 01

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன், நமன் தீர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, குவேனா மபகா.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல், நந்த்ரே பர்கர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, டிம் டேவிட்
  • ஆல்ரவுண்டர் - ரியான் பராக், ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - ட்ரென்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா (துணை கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, நந்த்ரே பர்கர்.

MI vs RR IPL 2024 Dream11 Prediction, Today Match MI vs RR, MI vs RR Dream11 Team, Fantasy Cricket Tips, MI vs RR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Mumbai Indians vs Rajasthan Royals

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement