
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலபரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. இதனால் முதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் மும்பை அணியும், ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதுள்ள எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவன் குறித்து இங்கு பார்க்கலாம்.