Advertisement
Advertisement
Advertisement

WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகாளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்காளுரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 12, 2024 • 12:39 PM
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை பெறமுடியும். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணி  - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களும் அபாரமாக செயல்படமுடியும். அதேசமயம் இங்கு எதிரணியை தடுப்பது சவாலாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • மும்பை இந்தியன்ஸ் - 03
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - 00

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ்: ஹீலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கைவர்-பிரண்ட், அமெலியா கெர், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), அமன்ஜோத் கவுர், எஸ் சஜனா, பூஜா வஸ்த்ரகர், ஹுமைரா காசி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: சோஃபி டிவைன், ஸ்மிருதி மந்தனா (கே), எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், திஷா கசாட், ஜார்ஜியா வேர்ஹாம், சோஃபி மோலினக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா தாக்கூர் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: யாஷ்திகா பாட்டியா (கேப்டன்), ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா
  • ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டெவின், ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், அமெலியா கெர், எலிஸ் பெர்ரி (துணை கேப்டன்), ஜார்ஜ் வேர்ஹாம்
  • பந்து வீச்சாளர்: சோஃபி மோலினக்ஸ்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement