ஐபிஎல் 2025: சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எது? - மைக்கேல் கிளார்க் கணிப்பு!
நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் மற்றும் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற தனது கணிப்பை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார்.

18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது வருகிற மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேற்கொண்டு 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் மற்றும் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Trending
அதன் ஒருபகுதியாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், மற்றும் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி யூடியூப் சேனலில் பேசிய கிளார்க், இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளேஆஃப்களுக்கு முன்னேறக்கூடும் என்று கணித்துள்ளார்.
மேற்கொண்டு எதிவரும் ஐபிஎல் 2025 தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கேள்விக்கு பதிலளித்த மைக்கேல் கிளார்க். நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லும் என கணித்துள்ளார். முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிவரை முன்னேறிய நிலையிலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
மைக்கேல் கிளார்க்கின் கூற்றுப்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு துறை மிகவும் வலுவானது மற்றும் அணியை ஆஸ்திரேலியாவின் நட்சத்திர கேப்டன் பாட் கம்மின்ஸ் வழிநடத்துகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், ஹைதராபாத் அணி அவருக்கு மிகவும் வலுவாகத் தெரிகிறது. அதேசமயம் பாஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நடப்பு சீசனில் தடுமாறக்கூடும் என்பதையும் கிளார்க் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now