
Michael Hussey Set To Return To Australia After Testing Negative (Image Source: Google)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி. இவருக்கு ஐபிஎல் தொடரின் போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை தேதி குறிப்பிடாமல் பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மைக் ஹஸ்ஸிக்கு, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் தனி விமானம் மூலம் மைக் ஹஸ்ஸி இன்று சொந்த நாட்டிற்கு திரும்பவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.