
ஆஸ்திரேலிவில் புகழ்பெற்ற பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் புத்தாண்டு தினமான இன்று நடைபெற்ற போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 224 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய சிட்னி சிக்சர்ஸ் அணி இறுதி வரை போராடி 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது . இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. மேலும் இது பிரிஸ்பேன் அணியினர் பெறும் இரண்டாவது வெற்றி ஆகும் .
இந்நிலையில் இந்த ஆட்டத்தின் 19ஆஅவது ஓவரில் நடைபெற்ற ஒரு சம்பவம் கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. 12 பந்துகளுக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் மார்க் ஸ்டிக்கிடி வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார் ஜோர்டான் சில்க்.