
ஐபிஎல் 14ஆவது சீசனில் துபாயில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. இரு அணிகளும் இதற்கு முன்பும் கோப்பையை வென்றுள்ளதால் இப்போட்டியில் வெற்றி பெற்று மீண்டுமொரு முறை யார் கோப்பையை வெல்வர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் கேகேஆர் அணியின் ஒரே பிரச்னை அந்த அணியின் கேப்டன் ஈயான் மோர்கனின் மோசமான ஃபார்ம் தான். அதுமட்டுமல்லாது, அமீரகத்தில் நிறைய போட்டிகளை ஸ்லோ பிட்ச்சான ஷார்ஜாவில் ஆடியது கேகேஆர் அணி. ஷார்ஜா பிட்ச்சில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோரின் பவுலிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் தான் அந்த அணியால் தொடர் வெற்றிகளை பெற முடிந்தது.
ஆனால் இறுதிப்போட்டி துபாயில் நடக்கவுள்ள நிலையில், அணியின் நலன் கருதி, ஃபார்மில் இல்லாத தன்னைத்தானே கேப்டன் மோர்கன் அணியிலிருந்து ஒதுக்கிக்கொண்டு, ஆண்ட்ரே ரஸ்ஸலை அணியில் சேர்த்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.