Advertisement

கிரிக்கெட் என்பது என்டர்டெயின்மென்ட் மற்றும் வெற்றி இரண்டையும் சார்ந்திருக்க வேண்டும் - மைக்கேல் வாகன்!

கிரிக்கெட் என்பது என்டர்டெயின்மென்ட் மட்டுமே அல்ல. என்டர்டெயின் பண்ணுவேன் என்றால் நீங்கள் சர்க்கஸ்க்கு சென்று விடுங்கள் என்று பேஸ் பால் கிரிக்கெட்டை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 29, 2023 • 09:51 AM
Michael Vaughan slams England bowlers for their performance on Day 1 of Lord’s Ashes Test!
Michael Vaughan slams England bowlers for their performance on Day 1 of Lord’s Ashes Test! (Image Source: Google)
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி பேஸ்பால் கிரிக்கெட் எனும் புதிய அணுகுமுறையை கையில் எடுத்து அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. பிராண்டன் மேக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் கூட்டணி தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து என வரிசையாக முன்னணி அணிகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இந்த அணுகுமுறையை சரி என்று காட்டி வருகிறது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் என்றால் மந்தமாக இருக்கும். ஐந்து நாள் முழுவதும் யார் கண்டுகளிப்பார்கள்? என்று இருந்த நிலையை ஓரளவிற்கு மாற்றி போட்டியின் முதல் நாளில் இருந்தே பார்த்து ரசிக்கும் அளவிற்கு விளையாடி வருகின்றனர்.தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆசஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், பேஸ்பால் அணுகுமுறையை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் முதல்நாள் முடிவதற்குள்ளேயே 393 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

Trending


ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 386 அடித்துவிட்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியை 273 ரன்கள் கட்டுப்படுத்தி, 281 ரன்கள் இலக்கை சேஸ் செய்தது. எட்டு விக்கெட்டுகள் பறிபோனபோதும், ஒன்பதாவது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் மற்றும் லையன் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணியை வீழ்த்தி பேஸ்பால் கிரிக்கெட்டை கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்ததற்காக தற்போது வரை பென் ஸ்டோக்ஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் தனது விமர்சனத்தை முன்வைத்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “டெஸ்ட் கிரிக்கெட்டில் என்டர்டெயின்மென்ட் செய்வது என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் வெறுமனே என்டர்டெயின்மென்ட் எனும் நோக்கில் இருந்தால் நீங்கள் கிரிக்கெட்டுக்கு வர வேண்டாம் சர்க்கஸுக்கு செல்லுங்கள். கிரிக்கெட் போட்டி என்பது என்டர்டெயின்மென்ட் மற்றும் வெற்றி இரண்டையும் சார்ந்திருக்க வேண்டும். 

தங்களுடைய அணி நன்றாக எண்டர்டெயின்மென்ட் செய்தது என்று எந்த ரசிகரும் விரும்பமாட்டான். இறுதியில் வெற்றி பெற்றது என்பதற்கு தான் விரும்புவார்கள். அதேநேரம் கிரிக்கெட் வாரியமும் வெற்றியை நோக்கி தான் இருக்கும். இங்கிலாந்து அணுகுமுறை மிகச் சிறப்பாக இருக்கிறது. அதேநேரம் போட்டியை வெல்வதற்கு எது சரி என்கிற அணுகுமுறையையும் நேரத்திற்கு ஏற்ப மாற்றிக்கொண்டு கையாள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement