இந்த இலங்கை வீரர் டிராவிட்டை கவர்ந்து விட்டார் - மிக்கி ஆர்த்தார்
ராகுல் டிராவிட்டை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா வெகுவாக கவர்ந்துவிட்டதாக இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடிவரும் அதேவேளையில், இலங்கை அணியோ சொந்த மண்ணில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. இந்திய அணியை டி20 போட்டியில் 164 ரன்களுக்கு கட்டுப்படுத்தினாலும், அந்த இலக்கையே அடிக்கமுடியாமல் 126 ரன்களுக்கு 19ஆவது ஓவரிலேயே ஆல் அவுட்டாகி தோற்றது இலங்கை அணி.
Trending
இந்த தொடரில் இலங்கை அணிக்கு ஒரே மன ஆறுதலாக இருப்பது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா தான். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பெரிதாக எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. ஆனாலும் திறமைகளை அடையாளம் காண்பதில் வல்லவரான ராகுல் டிராவிட், துஷ்மந்தா சமீரா தன்னை வெகுவாக கவர்ந்துவிட்டதாக இலங்கை பயிற்சியாளரிடம் கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், முதல் டி20க்கு பிறகு அதை உறுதிப்படுத்தியுள்ளார் இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர். முதல் டி20 போட்டியில், ஆட்டத்தின் முதல் பந்திலேயே பிரித்வி ஷாவை வீழ்த்தி மிரட்டிய சமீரா, ஹர்திக் பாண்டியாவையும் வீழ்த்தி இந்திய அணியின் ரன்னை கட்டுப்படுத்த உதவினார்.
இதையடுத்து, முதல் டி20 போட்டிக்கு பிறகு துஷ்மந்தா சமீரா குறித்து பேசிய மிக்கி ஆர்தர், துஷ்மந்தா சமீரா அவரது பவுலிங்கை மேம்படுத்த கடுமையாக உழைத்துள்ளார். அருமையான பவுலர் அவர். ராகுல் டிராவிட்டுடன் பேசியதன் அடிப்படையில் கூறுகிறேன்.. சமீராவின் பவுலிங் மற்றும் வளர்ந்துவந்திருக்கிற விதம் ராகுல் டிராவிட்டை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்று மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now