
Paarl Royals vs MI Cape Town Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் முன்னேறிவுள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எஸ்ஏ20 லீக் தொடரின் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
PR vs MICT, SA20 2025: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - எம்ஐ கேப்டவுன் vs பார்ல் ராயல்ஸ்
- இடம் - செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானம், கெபெர்ஹா
- நேரம் - பிப்ரவரி 02, இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)