
இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்திசௌத் குரூப்பில் இடம்பெற்றிருந்த சர்ரே, மிடில்செஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மிடில்செஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய சர்ரே அணியில் ஓபனர்கள் வில் ஜாக்ஸ், லூரி இவான்ஸ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார்கள். இவர்களது அதிரடியை எந்த பௌலராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த பார்ட்னர்ஷிப் 12 ஓவர்களில் 145/0 ரன்களை குவித்து அசத்தியது. குறிப்பாக, லுகே ஹால்மேன் வீசிய 11ஆவது ஓவரில் வில் ஜாக்ஸ் தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.
இந்நிலையில், 12.4ஆவது ஓவரில் இவான்ஸ் 85 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸ் 8 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 96 ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஓரளவு ரன்களைச் சேர்க்க, சர்ரே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு252 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தது.