Advertisement

ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் vs துபாய் கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐஎல்டி20 லீக் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியை எதிர்த்து துபாய் கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 17, 2024 • 12:58 PM
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் vs துபாய் கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃப
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் vs துபாய் கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃப (Image Source: Google)
Advertisement

ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ், கல்ஃப் ஜெயண்ட்ஸ், துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து நடைபெற்ற பிளே ஆஃப் சுற்று முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் முறையாக ஐஎல்டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் vs துபாய் கேப்பிட்டல்ஸ்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் இந்த மைதானத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அதிக ரன்களையும், விக்கெட்டுகளையும் கைப்பற்ற முடியும். மேலும் இந்த மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் பேட்டர்கள் பெரிதளவில் ரன்களை குவித்துள்ளதால், இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது பெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை 

ஐஎல்டி20 தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஜீ குழுமம் ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல் ஜீ5 ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 05
  • மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் - 01
  • துபாய் கேப்பிட்டல் - 04

உத்தேச லெவன்

எம்ஐ எமிரேட்ஸ்: முஹம்மது வசீம், ஆண்ட்ரே ஃபிளெட்சர், டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்ட், நிக்கோலஸ் பூரன் (கே), டிம் டேவிட், அகீல் ஹொசைன், டிரெண்ட் போல்ட், ரீஸ் டாப்லி, முஹம்மது ரோஹித் கான், வக்கார் சலாம்கெயில்.

துபாய் கேப்பிட்டல்ஸ்: லூயிஸ் டு ப்ளூய், டாம் ஆபெல், சாம் பில்லிங்ஸ் (கே), ரோவ்மேன் பாவெல், சிக்கந்தர் ரஸா, ஜேசன் ஹோல்டர், ராகுல் சோப்ரா, அகிஃப் ராஜா, ஒல்லி ஸ்டோன், ஸ்காட் குகெலிஜன், ஹைதர் அலி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: நிக்கோலஸ் பூரன், சாம் பில்லிங்ஸ்
  • பேட்டர்ஸ்: கீரன் பொல்லார்ட், லுயிஸ் டு ப்ளூய், டாம் ஆபெல்
  • ஆல்ரவுண்டர்கள்: டுவைன் பிராவோ(துணைக்கேப்டன்), சிக்கந்தர் ராசா(கேப்டன்), ஜேசன் ஹோல்டர்
  • பந்துவீச்சாளர்கள்: ஸ்காட் குகெலிஜ்ன், டிரென்ட் போல்ட், ரீஸ் டாப்லி.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement